கடைசிப் பல்லவன்

என் பார்வையில் இந்த உலகம்....!!!

Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

எனக்கு இந்த கடவுளைப் பிடிக்கவில்லை...



















எனக்கு இந்த கடவுளைப் பிடிக்கவில்லை.
தான் ஒரு கரையிலும்
ஏனைய மனித இனம் எல்லாம் மற்றொரு கரையிலும்
வாழுமாறு சபித்த(!!) இந்தக் கடவுளை எனக்குப் பிடிக்கவில்லை.

இரண்டு கரைகளுக்கும் இடையில்
தீரா நதியொன்று ஓடிக் கொண்டே இருக்கிறது.
இங்கிருந்து அங்கே செல்ல எதையாவது கொண்டு
நதியை நிரப்ப நினைக்கிறார்கள் எல்லா மனிதர்களும் நானும்..!!

எல்லாவற்றையும் அள்ளி நதியில் போட்டப் பின்பு
என்னிடத்தில் வெறும் கேள்விகள் மட்டுமே
மிச்சமிருக்கின்றன.. ஏகப்பட்ட கேள்விகள்..
கேள்விகளை எல்லாம் நதியினுள் எறிந்து கொண்டே இருக்கிறேன்.
கேள்வியும் குறைந்த பாடில்லை நதியும் நிறைந்த பாடில்லை..!

உற்றுப் பார்க்கிறேன்.. கோடான கோடி ஆண்டுகளாய்
கோடான கோடி மனிதர்களின்
கோடான கோடிக் கேள்விகளோடு
தீராமல் ஓடிக்கொண்டிருக்கிறது அந்த நதி...!!

கேள்விகள் எல்லாவற்றையும் அறிவியல்
உடைத்துக் கொண்டே வருகிறது..
அதன் கடைசிக் கேள்வியில்
கடவுள் ஒளிந்திருக்கிறார் என
ஆருடம் சொல்லிப் போனார் சுஜாதா.

அன்பே கடவுளாம் சொன்னார் இன்னொருவர்..
அப்படியானால்
அன்பு வேறு கரையிலும் மனிதர்கள் வேறு கரையிலுமா.??
இருக்கலாம்..எல்லா மனிதர்களிடமும் அன்பிருப்பதாய்
யார் சொன்னது..?

ஆனால் கேள்விகளும் மனிதர்களும்...
ஏன் கடவுள்களும்(!!) கூட...
வந்துச் சென்றுகொண்டே இருக்கிறார்கள்.
எல்லாவற்றையும் பார்த்துப் புன்னகைத்தபடி நின்றிருக்கும்
காலம் மறைத்து வைத்திருக்கிறது...!!!

கடவுளையும் நம் இன்ன பிற
கேள்விகளுக்கான பதில்களையும்..!!